Thursday, March 19, 2015

சீறி எழும் சிலம்பம்சிலம்பத்தைக் கொண்டு ஒருத்தரை தாக்கினோம்னா அது சிலம்புச்சண்டைதொட்டுவிளையாண்டோம்னா அது சிலம்பு விளையாட்டுஅதையே அலங்கார பாவனைகளோடஆடினோம்னா அது சிலம்பாட்டம்சிலம்பத்துடைய முறைகளை நாம விலங்குகள்கிட்ட இருந்துதான்கத்துக்கிட்டோம்மாட்டுடைய வால் சுழற்சியை அடிப்படையா வெச்சதுதான் சிலம்பத்தின் சுத்துமுறையானையுடைய தும்பிக்கை அசைவை அடிப்படையா வெச்சதுதான் சிலம்பத்தின் அடிமுறைஇவ்வாறாக தன் மாணவர்களுக்கு வகுப்பெடுத்து விட்டு சிலம்பத்தை கையில் ஏந்தியபடிசொல்லளவில் இருந்த சிலம்பத்தின் சுற்று முறைகளையும்அடி முறைகளையும் செயலளவில்செய்து காட்டி விளக்குகிறார் ரேவதிஈரோடு அருகே கருங்கல்பாளையத்தில் இயங்கி வரும்கலைத்தாய் சிலம்பப் பயிற்சிப்பள்ளியின் சிலம்பம் மற்றும் நாட்டுப்புறக்கலைகளின் ஆசிரியையாகஇருக்கும் ரேவதி தற்போது கருங்கல்பாளையம் நகரவை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்புபடித்து வரும் மாணவிபள்ளிகளுக்கிடையே நடைபெறும் மாவட்டம் மற்றும் மண்டல அளவிலானசிலம்பப்போட்டிகளில் கலந்து கொண்ட போட்டிகளிலெல்லாம் முதல் பரிசும்மாநில அளவிலாககலந்து கொண்ட 11 போட்டிகளில் 9 போட்டிகளில் வெற்றியும் பெற்றவர்மூட்டை தூக்கும்தொழிலாளியின் மகளான இவர் தன் ஏழ்மைப் பின்னணியை எல்லாம் பின் தள்ளி விட்டு சிலம்பம்மற்றும் நாட்டுப்புறக்கலைகளிலும் சரி படிப்பிலும் சரி கில்லியாய் சீறிப்பாய்பவர்.

சிலம்பம்ங்கிறது என் ஜீன்லயே இருக்குஎன் தாத்தாவும்அப்பாவும் சிலம்பம் விளையாடுவாங்க.சின்ன வயசுல இருந்தே அதையெல்லாம் பார்த்துட்டு வர்ற எனக்கு சிலம்பத்தோட ஒவ்வொருசுத்தும் மனசுல ஆழமா பதிஞ்சிருந்ததுவண்டி வீரான் கோவில் திருவிழாவுல என்னோட அண்ணன்சிலம்பம் சுத்தி பரிசு வாங்கினப்ப எல்லோரும் அவரைப் பாராட்டுனாங்கஅதைப் பார்த்ததிலிருந்துஅந்த பாராட்டுகளை நாமளும் வாங்கணும்ங்கிற ஆசை வந்துச்சுஎங்க பகுதியில கலைத்தாய்சிலம்ப பயிற்சிப்பள்ளியில மாஸ்டர் மாதேஸ்வரன் மாணவர்களுக்கு இலவசமா சிலம்பம் கத்துக்கொடுத்துட்டு வர்றாருஎனக்கு அஞ்சு வயசா இருந்தப்பவே அவர்கிட்ட சிலம்ப மாணவியாசேர்ந்தேன்எனக்கு முன்னாடி அங்க பசங்க மட்டும்தான் சிலம்பம் கத்துக்கிட்டு வந்தாங்கநாந்தான்அந்தப் பயிற்சிப்பள்ளியோட முதல் மாணவிசிலம்பம் கத்துக்கிறதால மத்தவங்களைக் காட்டிலும்என்னால வேகமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க முடிஞ்சுதுகாலை நாலு மணிக்கே எந்திரிச்சுசிலம்பப் பயிற்சியை ஆரம்பிச்சிடுவோம்காலைல ரெண்டு மணி நேரம் சாயங்காலம் ரெண்டு மணிநேரம்னு பயிற்சி நடக்கும்சிலம்பத்தைப் பொறுத்த வரைக்கும் ஒரு முறை கத்துக்கிட்டதும்போதும்னு விட்டுட்டோம்னா அவ்ளோதான்தொடர்ந்து பயிற்சி எடுத்துக்கிட்டே இருக்கணும்அப்பதான் அதோட நெளிவு சுளிவுகள் நமக்கு புரிய வரும்சிலம்பம் சுத்திக்கிட்டே இருந்தோம்னாஒரு கட்டத்துக்கு மேல நமக்குள்ள ஒரு நளினம் வரும்நளினத்தோட சிலம்பை சுத்தும்போது அதுகலையா வடிவம் பெறும்சிலம்பம்ங்கிறது ஒரு ஆட்டக்கலைங்கிறதைத் தாண்டி அது ஒரு நல்லஉடற்பயிற்சியும் கூடபெண்கள் சிலம்பம் சுத்தும்போது மாதவிடாய் இரத்தப்போக்கு சீரா இருக்கும்என்று சிலம்பத்தின் சிறப்புகள் பற்றி சொன்ன ரேவதி சிலம்பம் கற்கும்போதும்போட்டிகளில் கலந்துகொண்ட போதும் சில சவால்களையும் எதிர்கொண்டிருக்கிறார்.
இரண்டு கையிலயும் சிலம்பத்தைப்பிடிச்சுக்கிட்டு குதிச்சு அந்த சிலம்பத்தைத் தாண்டுறதுக்கு பெயர்வெட்டுப்பாடமுறைஇதை செஞ்சாத்தான் ஒருத்தங்களுக்கு சிலம்பம் ஆடுறதுக்கான தகுதியேஇருக்குஒரு தடவை வெட்டுப்பாடமுறை செய்யுறதுக்காக குதிக்கும்போது தடுக்கி விழுந்துவாய்லருந்து ரத்தம் கொட்டுச்சுஅதுக்கப்புறம் எனக்கு பயமே இல்லை நல்லாவெளையாடணும்ங்கிற வெறிதான் வந்ததுநான் ஏழாம் வகுப்பு படிச்சிக்கிட்டிருந்தபோதுராமநாதபுரத்தில் தமிழ்நாடு சிலம்ப சங்கம் நடத்தின மாநில அளவிலான சிலம்பப் போட்டியில்கலந்துக்கிட்டப்ப என்னை எதிர்த்து ஆடின பொண்ணு அடிச்சதுல என் இடது கண்ணுல இருந்துரத்தம் வந்துச்சுபயங்கரமான வலிஇருந்தாலும் பொறுத்துக்கிட்டு ஆடி ஜெயிச்சேன்.கஷ்டங்களையும்வலிகளையும் தாண்டி கிடைக்குற வெற்றி கொடுக்கிற சந்தோசத்தைவார்த்தையால சொல்லி புரிய வைக்க முடியாது” என்று பெருமிதம் கொள்ளும் ரேவதிநாட்டுப்புறக்கலைகளான ஒயிலாட்டம்கரகாட்டம்கோலாட்டம்தப்பாட்டத்திலும் தேர்ச்சிபெற்றுள்ளார்.

உழைப்போட வெளிப்பாடுதான் கலை இதுக்கு எடுத்துக்காட்டா ஒயிலாட்டம்கும்மியாட்டம்கோலாட்டத்தைச் சொல்லலாம்ஒயில்னா அழகுன்னு அர்த்தம்விளை நிலத்துல நாத்து நடுறதுதொடங்கி அந்தப் பயிர் வளர்ந்து அறுவடை செய்யுற வரைக்கும் களத்துல என்னென்ன வேலைகள்செய்வாங்களோ அந்த செயல்பாட்டுல நளினத்தைக் கூட்டினா அதுதான் அறுவடை ஒயில்நடவுநடுற செயல்முறையை அடிப்படையா வெச்சதுதான் கும்மியாட்டம்கும்மியுடைய அடுத்த கட்டவடிவம்தான் கோலாட்டம்.  கரகாட்டம்ங்கிறது இசையைக் கேட்டு அதற்கேற்றபடி ஆடவும்செய்யணும் அதே சமயம் தலையில் இருக்கிற கரகமும் விழக்கூடாதுமனதை ஒருநிலைப்படுத்தினால் மட்டும்தான் கரகாட்டம் ஆட முடியும்விலங்குகளை விரட்டுறதுக்காககண்டுபிடிக்கப்பட்ட பறை நாளடைவுல நம்ம தமிழ் மக்களில் வாழ்வியலோடு கலந்திருச்சு.மருத்துவமனைகள் இல்லாத காலத்துல ஒருத்தர் இறந்துட்டார்ங்கிறதை ஊர்ஜிதம் பண்றதுக்காகபறையை அடிச்சாங்கஅந்த சத்தத்தை கேட்டும் எழுந்திரிக்கலைன்னா இறந்துட்டதா முடிவுபண்ணிடுவாங்கஇப்படியா நம்ம தமிழ் பாரம்பர்ய கலைகள் எல்லாத்துக்கும் ஒவ்வொரு சிறப்பம்சம்இருக்குவேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த சாமுவேல்ங்கிறவர்தான் எங்களுக்கு இந்தப்பயிற்சிகளெல்லாம் கொடுத்தார்நாங்க குழுவா சேர்ந்து இந்தக் கலைகளையெல்லாம் பலமேடைகள்ல நடத்தியிருக்கோம்.” எனும் ரேவதி இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்குசிலம்பம் மற்றும் நாட்டுப்புறக்கலைகளை பயிற்றுவித்திருக்கிறார்தற்போது ஐம்பதுமாணவர்களுக்கு பயிற்சி அளித்துக்கொண்டிருக்கிறார்.

கத்துக்கணும்கத்துக்கொடுக்கணும்ங்கிறதுதான் எங்க கலைத்தாய் சிலம்பப் பயிற்சிப்பள்ளியோட விதிமுறையே.நான் பன்னிரெண்டு வருஷமா நிறைய கத்துக்கிட்டேன் அதையெல்லாம் இப்ப பலருக்குக்கத்துக்கொடுத்துக்கிட்டிருக்கேன்என்கிட்ட கத்துக்கிட்டவங்க இன்னும் பலநூறு பேருக்கு கத்துக்கொடுப்பாங்க இப்படியா இந்தக் கலைகள் பரவிக்கிட்டே போகும்” என்று முஷ்டி முறுக்கும் ரேவதிபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண் 463.

நான் நல்லாப்படிக்கிறன்னா அதுக்குக் காரணமும் நான் கத்துக்கிட்ட இந்த ஆட்டக்கலைகள்தான்.எப்படின்னு கேட்குறீங்களாஇந்த ஆட்டக்கலைகளால உடலுக்கும்மூளைக்கும் நல்ல பயிற்சிகிடைக்குதுஇதனால ஞாபகசக்தி அதிகரிக்கிறதோட உள்வாங்குற திறமையும் அதிகரிக்குதுஎந்தப்பாடத்தையும் ரொம்ப சீக்கிரத்துல உள்வாங்கிப் படிக்கிறதால குறைஞ்ச நேரம் படிச்சாலும் நிறையபடிப்பேன்இந்த வருஷம் ஜனவரி மாசம் சைலாத் சிலம்ப சங்கம் நடத்தின மாநில அளவிலானசிலம்பப் போட்டியில பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் வாங்குனதுக்காக “கலைக்கல்வி” விருதுகொடுத்தாங்கஎனக்கு ஆட்டக்கலைகள் எவ்ளோ முக்கியமோ படிப்பும் அவ்ளோ முக்கியம்” என்றுசொல்லும் ரேவதி..எஸ் ஆகி நாட்டுப்புறக்கலைகளுக்கான இலவசப்பள்ளி ஒன்றைத்துவக்குவதே தன் எதிர்கால இலக்கு என்கிறார்கனவுகள் வெல்லட்டும்.    
       -கி..திலீபன், நன்றி: குங்குமம் தோழி

1 comment:

  1. கருங்கல்பாளையத்தில் கற்றுதரப்படுகிறதா? தொடர்பு என்னைதரவும்.

    ReplyDelete