Friday, December 7, 2012

பேப்பரை மடி ..ஜாலியா படி ...

                   அந்த பள்ளியின் வகுப்பறைக்குள் ஆசிரியர் நுழைந்ததும் ,"வணக்கம் நண்பா "என்கிறார்கள்.      அத்தனை மாணவர்களும்.ஆசிரியரும்புன்னகையுடன்,   வணக்கம் நண்பர்களே"என்கிறார்.அங்கே...மாணவர்கள்,ஆசிரியர்,ஆயா,ஆசிரியர்,அதிகாரிகள்,என அனைவருமே நண்பர்கள்தான்.
                                   ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடி,கடம்பூர்,பர்கூர்மலை பகுதிகளில் பெருமளவில் பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர்.சாலை,பஸ் வசதிகள் இல்லாத மலை கிராமங்களில் உள்ள மாணவர்கள்,பள்ளிக்கூடம் செல்ல வேண்டுமானால்,பல கிலோமீட்டர் காட்டு வழியே நடந்துதான் செல்ல வேண்டும்.இந்த சிரமத்தை மனதில்கொண்டே பல பெற்றோர்கள் தம் பிள்ளைகளை ஆடு,மாடு மேய்க்க அனுப்பிவிடுகிறார்கள்.இதைதவிர்த்து,அவர்களை,ஆர்வத்துடன் பள்ளிக்கு வரவழைக்க "சுடர்" என்ற தொண்டு நிறுவனத்துடன் இணைந்த தேசிய குழந்தை தொழிலாளர்கள் சிறப்பு பள்ளிகள் ,பல இடங்களில் தொடங்கப்பட்டு உள்ளன.அங்கே சுட்டிகளை பள்ளிக்கு சுண்டி இழுக்க,ஒரிகமியை முக்கிய பாடமாக கற்றுதருகிறார்கள் .
                                     ஜடைசாமி என்ற மாணவன்,"நானு ஆறாங்கிளாஸ் படிக்கிறேனுங்க.முன்னாடி எல்லாம் பள்ளிகோடத்துக்கு வரவே புடிக்காதுங்க..இப்போ,முதல் ஆளா வரதே நான்தானுங்க.காகிதத்தை மடிச்சு தெனம் புதுசு புதுசா ஒரிகாமி கத்து கொடுப்பாங்க .கலர் கலரா கிளி,ரெட்டை கப்பல்,நேரு தொப்பி,பெங்குவின்,கொக்குனு எல்லாமே செய்வேனுங்க.நாங்க  செய்த ஒரிகமியை ஒரு நோடேல ஓட்டுவோம்.நல்ல செய்றவங்களுக்கு பரிசு கொடுப்பனாக்.நானும் வாங்கி இருக்கேனுங்க.பார்க்கறிங்களா நண்பா..."என்றபடி உற்சாகமா எடுத்து காட்டினான்.
                           இன்னும் சில சுட்டிகளும் தங்கள் திறமைகளை காட்டி அசத்தினார்கள்."உங்க எல்லோருக்கும் இந்த பள்ளிக்கூடம் பிடிச்சு இருக்கா?"என்று கேட்டால்,"ஓ!...ரொம்ப  புடிச்சு இருக்கு நண்பா .இங்கே யாருமே அடிக்க மாட்டாங்க.நிறைய கதைகள் சொல்வாங்க.அப்புறம்தான் புக்ல இருக்கிற பாடத்தையே நடத்துவாங்க நண்பா"என்றார்கள்.
"சுடர்"நிறுவனத்தின் இயக்குனரும் ,அறிவியல் இயக்கத்தின்  மாவட்ட  செயற்குழு உறுப்பினருமான நடராஜ்,"ஆசிரியரையும் பள்ளிகூடத்தையும் பார்த்தாலே பயந்து ஓடுற இவங்களை,புத்தகத்தை கொடுத்து படின்னா எப்படி படிப்பாங்க?அதனால்தான்,இவர்கள் பாடம் பத்தின பயம் இல்லாமல் வரணும்னு இதை ஆரம்பிச்சோம்.நாங்க நினைச்சதை விட அதிக ஆர்வம் காட்றாங்க.நல்லவும் படிக்கிறாங்க "என்றார் பெருமையாக.
        -கி.ச.திலீபன்  நன்றி:சுட்டி விகடன்

No comments:

Post a Comment